தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிலேயே விராத் கோலிதான் மிகப்பெரிய கஞ்சன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் இருந்து இயங்கி வரும் பண்பலை வானொலி ஒன்றின் நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் பங்கு பெற்றார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
இந்திய அணி வீரர்களிலேயே விராத் கோலிதான் மிகப் பெரிய கருமி. அவருடன் எப்பொழுது வெளியே சென்றலும் நான்தான் செலவு செய்வேன். பணம் கொடுக்க வேண்டி அவரை வற்புறுத்த வேண்டும்.
இவரைப் போலவே ஆசிஷ் நெஹ்ராவும் கஞ்சத்தனமாக இருப்பார். திருமணத்திற்கு பின் எங்களிடம் எப்போதும் 'எனக்கு திருமணமாகி விட்டது; இனி பணம் செலவு செய்ய இயலாது ' என்று கூறிக் கொண்டே இருப்பார்.
இது போல மேலும் பல வீரர்கள் உள்ளார்கள். அவர்கள் பெயர்களைக் கூற இயலாது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.